சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ. 6 கோடி நிதி – பள்ளிக்கல்வித்துறை அரசாணை …

by Lifestyle Editor

சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ. 6 கோடி நிதியாக ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46வது சென்னை புத்தகக் கண்காட்சி வருகிற 6ம் தேதி முதல் தொடங்கி 22ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியை வருகிற 6ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி பொற்கிழி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் விருதுகளை முதல்வர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment