இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் …!

by Lifestyle Editor

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது.

அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 39,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.120 குறைந்து ரூ.39,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment