பிக் பாஸ் அல்டிமேட்டில் முதலிடம் இவரா!

by Column Editor

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவினை சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். ஷோ தற்போது தான் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோழி முட்டையை அடைகாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல டீம்கள் நடுவில் சண்டை மற்றும் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது.

முதலிடம் இவரா:

இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் ஜூலி தான் முதலிடத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் முதல் சீசனில் ஜூலியின் பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆன நிலையில் தற்போது எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீர் விட்ட ஜூலி:

இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் ஜூலி பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். மக்கள் உன்னை திட்டும் அளவுக்கு நீ மோசமான பெண் கிடையாது, தற்போது அது மாறி இருக்கும். உன்னை திட்டியவர்கள் எல்லாம் இனி வரவேற்பார்கள் என பாலாஜி சொல்ல ஜூலி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.

Related Posts

Leave a Comment