இந்த வாரமும் பிக்பாஸில் ரம்யாகிருஷ்ணன்: கமலின் தற்போதைய நிலை என்ன?

by Column Editor

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப் நந்தகுமார், ஐக்கி (Iykki Berry), தாமரை செல்வி, பிரியங்கா தேஷ்பாண்டே, இம்மான் அண்ணாச்சி மற்றும் பவானி ரெட்டி. ஆகியோர் இருக்கின்றனர். இதில் நேற்றைய எபிசோடில் பிரியங்கா காப்பாற்றப்பட்டார்.

இதற்கிடையில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிற செய்து வெளியானதில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்விதான் எழுந்தது. அதன்படி கடந்த சனிக்கிழமை எபிசோடில், கமலே மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசி, தான் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார். அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இப்படி ஒரு நிலையில் அடுத்த வாரமும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் தொடர் இருமல் இன்னும் குறையவில்லை என மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் கமல்ஹாசன் வீடு திரும்புவார் என்று நம்பப்படுகிறது.

எனவே அடுத்த வாரம் இருமல் குறைந்து கமல்ஹாசன் முழு நலம் பெறும் பட்சத்தில் அவர் மீண்டும் நிகழ்ச்சி தொகுப்பினை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment