உலகில் நெடுந்தூரம் பயணம் செய்யும் 10 ரயில்கள் பற்றி தெரியுமா?

by Column Editor

10. ஷாங்காய் – யின்னிங் (சீனா):

இந்த ரயிலானது சீனா நாட்டில் ஓடுகிறது. இது ஷாங்காயிலிருந்து யின்னிங் வரை செல்கிறது. இது 4742 கிலோ மீட்டர்களை 52 மணிநேரம் 5 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும் வழியில் 31
நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

9. குகிஹார் – உரும்க்கி (சீனா ):

இந்த ரயிலானது சீனா நாட்டில் ஓடுகிறது. இது சீனாவில் குகிஹாரிலிருந்து உரும்க்கி வரை
செல்கிறது. 4827 கிலோ மீட்டர் தொலைவை 61 மணிநேரம் 10 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும்
வழியில் 38 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

8. ஹாங்சோகு – அக்சு (சீனா):

இந்த ரயிலானது சீனாவில் ஓடுகிறது. இது சீனாவில் ஹாங்சோகுவிலிருந்து அக்சு வர செல்கிறது. இது 4933 கிலோ மீட்டர் தொலைவை 68 மணிநேரம் 38 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும் வழியில் 46 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

7. குவாங்சோகு – லாஸா (சீனா):

இந்த ரயில் சீனா நாட்டில் ஓடுகிறது. இது குவாங்சோவிலிருந்து லாஸா வரை செல்கிறது. இது 4980 கிலோ மீட்டர் தொலைவை 52 மணிநேரம் 34 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும் வழியில் 11
நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

6. காஷ்கர் – யிங்க்டன் (சீனா):

இந்த ரயிலானது சீனாவின் காஸ்கரிலிருந்து யிங்க்டன் வரை பயணிக்கிறது. இது 5166 கிலோ மீட்டர் தொலைவை 72 மணிநேரம் 53 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும் வழியில் 11 இடங்களில் நிறுத்தி செல்கிறது.

5. மாஸ்கோ – டொம்மோட் (ரஷ்யா):

இந்த ரயிலானது ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து டொம்மோட் வரை செல்கிறது. 7318 கிலோ மீட்டர்
தொலைவை 140 மணிநேரம் 97 நிமிடங்களில் கடக்கிறது. செல்லும் வழியில் 97 இடங்களில் நிறுத்தி செல்கிறது.

4. பெய்ஜிங் – மாஸ்கோ (சீனா- ரஷ்யா):

இந்த ரயிலானது சீனாவின் பெய்ஜிங் என்ற இடத்திலிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ வரை செல்கிறது.
இது 7826 கிலோ மீட்டர் தொலைவை 127 மணி நேரங்களில் கடந்து செல்கிறது.செல்லும் வழியில் 33 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

3. மாஸ்கோ – பெய்ஜிங் (ரஷ்யா -சீனா ):

இந்த ரயிலானது ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து சீனாவின் பெய்ஜிங் வரை செல்கிறது. 8984 கிலோ
மீட்டர்களை கடக்கும் இது 145 மணிநேரங்கள் பயணம் செய்கிறது. 33 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

2. மாஸ்கோ- விளாடிவோஸ்டாக் (ரஷ்யா):

இந்த ரயிலானது ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டாக் வரை செல்கிறது. இது 9289 கிலோ மீட்டர் தொலைவை 144 மணி நேரங்களில் கடக்கிறது.செல்லும் வழியில் 58 இடங்களில் நிறுத்தி செல்கிறது.

1. மாஸ்கோ – ப்யோங்கியாங் (ரஷ்யா – வட கொரியா ):

இந்த ரயிலானது ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து வட கொரியாவின் ப்யோங்கியாங் பயணிக்கிறது. இது 10267 கிலோ மீட்டர் தொலைவை 206 மணி நேரங்களில் கடந்து செல்கிறது. செல்லும் வழியில் 157 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

Related Posts

Leave a Comment