வீட்டிற்குள் முடங்கிய சீனர்கள்: அதிகரிக்கும் தொற்றால் மீண்டும் முழு ஊரடங்கு!

by Column Editor

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கடுமையான முழு முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது பல லட்சம் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முழு முடக்கத்தால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தன.

கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களில் வெகுவாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு கடுமையான முழு முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆம், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுவீடாகச் சென்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டு வருகின்றன.

Related Posts

Leave a Comment