அதிரடியாக குறைந்த தங்கம் விலை…..

by Column Editor

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் போருக்கு பின் பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.

அதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய தினத்தில் புதிய உச்சத்தை எட்டியது.

அதன்படி தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரூ. 40,568-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 408 குறைந்து ரூ.40,168-க்கு விற்பனையாகிறது.

அதேப்போல், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.70க்கு விற்பனையான நிலையில் இன்று 1.10 காசுகள் குறைந்து ரூ. 74.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Related Posts

Leave a Comment