கார்டியோ உடற்பயிற்சிகள் – ஏன் இதை தவிர்க்க வேண்டும்..?

by Column Editor

கார்டியோவாஸ்குலர் அல்லது கார்டியோ உடற்பயிற்சிகள் என்பது உங்கள் இதயத் துடிப்பை நீண்ட நேரத்துக்கு அதிகரிக்கக் கூடிய பயிற்சிகள்

கார்டியோவாஸ்குலர் அல்லது கார்டியோ உடற்பயிற்சிகள் என்பது உங்கள் இதயத் துடிப்பை நீண்ட நேரத்துக்கு அதிகரிக்கக் கூடிய பயிற்சிகள் ஆகும். ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் அடிப்பது போன்ற பல வகை கார்டியோ பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க இந்த வகை உடற்பயிற்சிகள் சிறந்த தீர்வாக இருப்பதாக அறியப்படுகிறது.

ஜிம் மாஸ்டர்கள் கூட வெயிட் லிஃப்ட் போன்ற உடற்பயிற்சிகளை வழங்குவதற்கு முன்பாக கார்டியோ பயிற்சிகளை தான் செய்ய வைக்கின்றனர். நம் அன்றாட உடற்பயிற்சிகளின் ஒரு பகுதியாக மட்டுமே கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் பல ஆபத்துகள் நிறைந்துள்ளன. இதை ஏன் நீங்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

நேரம் அதிகம், பலன் குறைவு :

கார்டியோ பயிற்சிகளில் மிக அதிகமாக பின்பற்றப்படும் பயிற்சி ஓட்டப்பயிற்சி ஆகும். நாம் ஓடத் தொடங்கும்போது நம் உடல் அதிகமான ஆற்றலுடன் இயங்குகிறது. ஓடும்போது உடலில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் மற்றும் அப்போது சுரக்கும் ஹார்மோன்கள் என்பது நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஈடாக அமையாது. ஒரு மணி நேரம் ஓடினால் 300 முதல் 500 கலோரிகள் மட்டுமே குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஓட்டத்திற்காக எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், இதில் எரிக்கப்பட்ட கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும்.

டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் :

உங்கள் உடல் எடையை குறைக்க கார்டியோ பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், இந்தப் பயிற்சியில் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சில முன் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். தரம் குறைவான உணவுகளை தவிர்த்து, நல்ல சமச்சீரான உணவு பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். லேசான தசைப் பகுதிகளுக்கு வலுவூட்டக் கூடிய பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகியவை நல்ல பலன்கள் கிடைக்க உதவிகரமாக அமையும்.

அதிக பயிற்சி :

பொதுவாக கார்டியோ பயிற்சிகள் என்பது நீண்ட நேரத்திற்கு செய்யப்படும் மிகுதியான உடற்பயிற்சி ஆகும். இது உங்கள் உடலில் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்துவதோடு, மிகுந்த பயிற்சி செய்துவிட்டோம் என்ற உணர்வை கொடுத்துவிடும். ஆகவே, நீண்ட நேர பயிற்சிகள் மூலமாக நீங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பலன்களை இது குறைத்துவிடும்.

கொழுப்பை எரிக்காது :

உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் திறனை கார்டியோ பயிற்சிகள் குறைத்துவிடும் என நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அது உண்மையே. கார்டியோ பயிற்சிகளின் போது உங்கள் உடலின் தசை செல்களில் உள்ள ஆற்றல் தான் அதிகம் எரிக்கப்படும். அதே சமயம், கொழுப்பை தக்க வைத்துக் கொள்ள ஊக்குவிக்கும். இறுதியாக அதிக தசை செல்கள் உடைபடுவதால், நீங்கள் எதிர்பார்த்ததை விட மிகுதியான எடை குறைப்பு ஏற்பட்டுவிடும்.

Related Posts

Leave a Comment