பிக் பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வெளியேற்ற போகும் போட்டியாளர் இவரா?

by Column Editor

பிக் பாஸ் அல்டிமேட்டில் இதுவரை வெளியான வாக்குகள் அடிப்படையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கும் 2வது வாரம் யார் வீட்டை விட்டு செல்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்கள் இந்த வகை நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். அதனால் தான் பிக் பாஸ் ஷோவின்டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கிறது.மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் 5 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே பிக் பாஸ் அல்டிமேட் குறித்த தகவல்கள் வேகமாக பரவின.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 5 ஃபைனல்ஸ் நிகழ்ச்சியில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் வாரமே அபிராமி புகைப்பிடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன. இது போன்ற பல சண்டைகளும், வேடிக்கைகளும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நேரத்தில் தான் பல காரணங்களால் கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மீண்டும் பிக் பாஸ் 6சீசனில் சந்திப்போம் என்றார். அவருக்கு பதில் கடந்த வாரம் நடிகர் சிம்பு தொகுப்பாளராக உள்ளே வந்தார்.

சிம்புவின் முதல் அறிமுகம் என்பதால் நிகழ்ச்சி படு ஜாலியாக போனது. அதே போல் எவிக்‌ஷனும் கைவிடப்பட்டது. போட்டியாளர்கள் செம்ம குஷியாகினர். அதனைத்தொடர்ந்து வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் டிவி சதீஷ் மற்றும் சுரேஷ் தாத்தா உள்ளே சென்றுள்ளனர். இதுவரை இந்த போட்டியில் இருந்து சுஜா, வனிதா, அபிநய், ஷாரிக் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்டில் சினேகன், ஜூலி, அனிதா, அபிராமி, பாலாகி, ஸ்ருதி, ஆகியோர் உள்ளன்ர். சதீஷ் மற்றும் சுரேஷ் தாத்தாவுக்கு முதல் வாரம் என்பதால் நோ நாமினேஷன்.

இப்படி இருக்கையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியே போக போவது யார்? என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகள் அடிப்படையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த வாக்குகள் பெற்று கடைசி 3 இடத்தில் இருப்பது பாலாஜி, சினேகன், ஸ்ருதி. இதில் ஸ்ருதி அல்லது சினேகன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment