அப்படிபோடு! மிரட்டிய பாரதி.. ஒட்டுமொத்த உண்மையும் போட்டுடைத்த கண்ணம்மா

by Column Editor

லட்சுமியிடம் கண்ணம்மா, ”இவர் தான் உன் அப்பா” என்று பாரதியை கை காட்டுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிக்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க போகிறது. காரணம், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஒட்டு மொத்த உண்மையும் போட்டு உடைக்கிறார் கண்ணம்மா. பாரதி, லட்சுமி, ஹேமா, வெண்பா என ஒட்டு மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? என்பது சுருக்கமாக உங்கள் பார்வைக்கு. போன வாரத்தில் இருந்து ஜவ்வு போல் கண்ணம்மாவின் பிறந்த நாள் காட்சிகளை இழுத்து வருகிறார் சீரியல் இயக்குனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில்கண்ணம்மாசொல்ல போகும் உண்மைக்காக லட்சுமி மட்டுமில்லை ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான புரமோ மொத்த ஆர்வத்தை தூக்கி போட்டது. காரணம், பாரதி கடைசி வரை கண்ணம்மாவை உண்மையை சொல்லவிடாமல் தடுத்தது போல் காட்சிகள் இடம்பெற்றது தான். இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் இயக்குனரை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக கண்ணம்மா, பாரதியிடம் ஹேமா பற்றிய முழு உண்மையையும் சொல்லி முடிக்கிறார். ஆனால் பாரதி வழக்கம் போல் கண்ணம்மாவை திட்டி விட்டு நாடகக்காரி என்று பெயர் வைத்துவிட்டு செல்கிறார். உடனே செளந்தர்யா உள்ளே வந்து, கண்ணம்மாவை சமாதானம் செய்கிறார். ”9 வருஷமாக சந்தேகப்படும், பெற்ற குழந்தையை ஏற்றுக் கொள்ளாத கேவலமான புருஷன் உனக்கு வேண்டாம், அவன் செத்துவிட்டான்னு லட்சுமியிடம் சொல்லு ”என்று அதிர்ச்சியை தூக்கி போடுகிறார்.

கண்ணம்மாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை. ஒருபக்கம் குழந்தை லட்சுமி அப்பா வருகைக்காக வாசலை பார்த்து ஏங்கி கொண்டிருக்கிறாள். இது இப்படி இருக்க, ஒருவேளை லட்சுமியிடம் நான் தான் அப்பா என்று சொன்னால், உன்னுடைய ஆண் நண்பன் எழுத்தாளர் பற்றி கூறுவேன் என்று கண்ணம்மாவை பாரதி மிரட்டியும் சென்றார்.

இந்த கோபத்தில் நின்று கொண்டிருந்த கண்ணம்மா, லட்சுமியிடம் போய் எல்லா உண்மைகளையும் கொட்டி தீர்ப்பது போல் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதாவது, லட்சுமியிடம்கண்ணம்மா”இவர் தான் உன் அப்பா” என்று பாரதியை கை காட்டுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிக்கப்படுகிறது. இது உண்மையா? இல்லை பாரதி காணும் கனவா?இது உண்மை என்றால் புரமோவில் காட்டியது என்ன? என்று ஆயிரம் சந்தேகங்கள் டெலிகாஸ்டுக்கு பின்பு ரசிகர்கள் மனதில் எழ வாய்ப்பு உள்ளது. அவற்றிற்கான விடை நாளை தெரிந்து விடும்.

Related Posts

Leave a Comment