சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை…சந்தோஷத்தில் கேப்ரில்லா!

by Column Editor

முதலிடத்தில் இருப்பது சன் டிவி-யின் சுந்தரி சீரியல் கேரக்டரான சுந்தரி தான்.

வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் முக்கியத்துவம் பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பல மூத்த பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் கூட சின்னத்திரையில் தோன்றி மீண்டும் ரசிகர்களை தங்கள் நடிப்பு திறமையால் ஈர்த்து வருகின்றனர். நடிகை ராதிகா துவங்கி அம்பிகா வரை பல நட்சத்திரங்கள் சீரியல் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளனர்.

அதே நேரம் சீரியலில் நடித்து பாப்புலராகும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கதவை தட்டாமல் இல்லை. பல முன்னணி சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்த சில கலைஞர்கள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர். சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அதில் போட்டியில் இருக்கும் 2 முக்கிய சேனல்கள் சன் டிவி மாற்றம் ஸ்டார் விஜய் டிவிதான்.

இந்த 2 சேனல்களிலும் காலை துவங்கி இரவு வரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் மாலை 7 மணி துவங்கி இரவு 10 மணி வரை ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் இந்த 2 டிவி சேனல்களின் TRP ரேட்டிங் எகிற காரணமாக இருப்பவை. சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மற்றும் ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆகிய இரண்டுமே TRP ரேட்டிங்கில் பயங்கரமாக போட்டியிடுபவை.

broadcast audience research council எனப்படும் Barc கவுன்சில் வெளியிடும் வாராந்திர TRP ரேட்டிங் பட்டியலில் ஒன்று விஜய் டிவி-யின் சீரியல் முதலிடத்தில் இருக்கும். இல்லை என்றால் சன் டிவி சீரியல் இருக்கும். இதனிடையே Barc வெளியிடும் ரேட்டிங் ஒருபக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் கலக்கி மக்கள் மனதை கவர்ந்த கலைஞர்கள் மற்றும் சீரியல்கள் பற்றி வேறு சில நிறுவனங்களும் கருத்து கணிப்புகளை வெளியிடும்.

அந்த வகையில் Ormax என்ற நிறுவனம் மக்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த பட்டியலை கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகிறது. Ormax Characters India Loves (Tamil) என்ற தலைப்பில் ஜனவரி 2022-ல் மிகவும் பிரபலமான புனைகதை பாத்திரங்களை (Most popular Fiction Characters) பட்டியலிட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது சன் டிவி-யின் சுந்தரி சீரியல் கேரக்டரான சுந்தரி தான்.

இரண்டாமிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டர், மூன்றாமிடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் ரோஜா கேரக்டர், நான்காமிடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் பாக்கியா கேரக்டர், ஐந்தமிடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் கயல் கேரக்டர் இருக்கிறது. ஆக மொத்தம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சுந்தரி கேரக்டர் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

Related Posts

Leave a Comment