ஆண்ட்ராய்டு 13 வெர்சன் எப்போது? கூகுள் நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்!

by Column Editor

ண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தற்போதைய மார்க்கெட்டுகளில் நிறைய வந்துவிட்டன. கூகுள் நிறுவனம் இதுவரை ஆண்ட்ராய்டு 12 வெர்சன் ஓஎஸ்களை வெளியிட்டு இருக்கிறது.

இதனிடையில், தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்யை வெளியிட உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 13 ஆனது குறிப்பிட்ட டெவலப்பர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளது.

இந்த ஓ.எஸ்ஸின் பீட்டா வெர்ஷன் ஏப்ரல் மற்றும் அதற்கு பின் வரும் மாதங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு வெர்சன்களுக்கு வழக்கமாக கூகுள் உணவு வகைகளின் பெயர்களை வைக்கும்,

ஆனால் இந்த முறை ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 13-ல் செயலிகளை பயன்படுத்த அருகில் உள்ள வைஃபை கருவிகளை இணைக்கும்போது ரன் டைம் அனுமதி கேட்கப்படுமாம்.

இந்த புதிய ஓஎஸ்ஸில் முன் இருந்ததை விட சிறந்த தீம்கள், செயலிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் மேம்பாடு, சிறந்த தனியுரிமை அம்சங்கள், மொழி கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment