அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு ரூ.224 குறைவு…

by Column Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ37,496க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குவதில் எப்போதுமே பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவர். ஆபரணங்கள் அணிந்து பார்ப்பதில் மகிழ்ச்சி என்றாலும், தங்கத்தில் முதலீடு என்பது எப்போதுமே சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏதோ ஒரு நாள் தங்கத்தின் விலை குறையும்போது , அடுத்த நாளே பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்தது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளூம் அபாயம் இருப்பதால், உலகச்சந்தையில் தங்கத்தின் மீதான மூதலீடு அதிகரித்து வருவதாகவும், மேலும் வண்ணமே இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் மாறாக இன்றைய தினம் தங்கம் விலை வெகுவாக குறைந்திருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

அந்தவகையில் சென்னையில் நேற்று முன்தினம்/ நேற்று ஒரு கிராம் தங்கம் 4,715 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37,720 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ரூ. 4,687 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,496 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் நேற்று ரூ67.40 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 80 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 68.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment