“ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்க” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

by Column Editor

மழையால் சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ,நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்த நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை சாகுபடி செய்ய ஏதுவாக 6 ஆயிரத்து 98 ரூபாய்க்கான இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி அரசு செய்திக் குறிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பா பருவத்தில் பாதிப்படைந்த இளம் பயிர்களுக்கு 6038 ரூபாய்களை இடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக நிதியாக வழங்கப்படும் என்று கடந்த 20ஆம் தேதி செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

இழப்பீடு என்பது நவம்பர் 15ஆம் தேதி வரை பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆனது என்றும் அதுவும் அண்மையில்தான் வழங்கப்பட்டது என்றும், இதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு டிசம்பர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் பெய்த மழையின் விளைவாக ஏற்பட்ட, பயிர் செய்வதற்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதத்திற்கான பயிர் சேதம் குறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்படும் . இதற்கான உத்தரவை இன்னும் அரசு அளிக்கவில்லை என்றும் சம்பா மற்றும் தாளடி பருவத்தை பொறுத்தவரையில் பருவத்தின், ஆரம்ப கட்ட நிலையில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் குறைந்த அளவு விவசாயிகள் பயன் அடைந்தனர் என்றும் அதன் பிறகு பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கான குரல் கொடுக்கும் பொதுவுடமைக் கட்சிகள் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது.

தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி 10 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்ததாகவும் ,தற்போது அறுவடை தீவிரமாக இருக்கின்ற நேரத்தில் எதிர்பாரா மழை காரணமாக, ஒன்றரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், சாய்ந்து விட்டதாகவும் ஊடுபயிராக சாகுபடி செய்த பிறகு நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில், காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அறுவடை செய்த நெல்லை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ளதாகவும் ,திடீர் மழை காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதாகவும், இதற்கு காரணம் தினமும் குறைந்த அளவிலேயே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதும் தான் என்றும் , இதன் விளைவாக ஈரப்பதம் அதிகரித்து விட்டதாகவும் இன்றைய நிலவரப்படி 80 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப் படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளதாகவும் , விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பிப்ரவரி மாதம் வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மழையால் சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1500 முட்டைகளை கொள்முதல் செய்யவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் அவற்றை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment