மறுவாக்குப்பதிவு: 900 வாக்காளர்கள்..பதிவானதோ 41 ஓட்டுகள் – காலை 9 மணிநேர நிலவரம்!!

by Column Editor

தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு அமைதியான சூழலில் பல இடங்களில் நடந்து முடிந்தது. இருப்பினும் சில இடங்களில் முறைகேடு, இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி , 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி , திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடிஎன 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, , சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடியில் 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் 41 வாக்குகளே பதிவாகின. 179-வது வார்டு பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்திலும் வாக்குப்பதிவு குறைவாகவே உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 வது வார்டில் 15% வாக்குகளும், திருவண்ணாமலை வார்டு எண் 25ல் 2 வாக்குச்சாவடிகளில் 16.35% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Related Posts

Leave a Comment