கஞ்சம் – கடற்கரைகள் மற்றும் திருவிழாக்களின் உறைவிடம்!

by Lifestyle Editor

ஒடிசா மாநிலத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று கஞ்சம். ‘கன்-இ.ஆம்’ என்ற வார்த்தைக்கு தானியங்களை சேகரித்து வைக்கும் இடம் என்று பொருளாகும். வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் வருடம் முழுவதும் சுற்றுலா வர ஏற்ற எண்ணற்ற கடற்கரைகளை கொண்டுள்ள இடமாக கஞ்சம் உள்ளது. பசுமைப் போர்வையில், சிறு சிறு குன்றுகளுடன் கூடிய மாபெரும் மலைகளுடன், மனதை மயக்கும் நதிகளை கொண்டிருக்கும் பழமையான சின்னங்களின் உறைவிடம் கஞ்சம்.

புனிதமான மற்றும் பழமையான கோவில்களை கொண்டிருக்கும் கஞ்சம் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து கடவுளின் அதிசய சக்திகளை கேட்பது வழக்கம். டோலோ யாத்ரா, தாராதாரினி மேளா, தன்டா யாத்ரா மற்றும் தாக்குரானி யாத்ரா ஆகிய திருவிழாக்கள் நடைபெறும் கால்ததில் முழுவீச்சில் இயங்கும் கஞ்சம் நகரத்திற்கு பெருந்திரளான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருவது வழக்கம். கற்சிற்பங்கள், மூங்களில் கைவினை பொருட்கள், மர சிற்பங்கள், பயன்பாட்டு பொருட்கள் மற்றும் பித்தளை வடிவமைப்புகள் ஆகியவையும் இந்த மாவட்டத்தின் மகுடத்தில் வைக்கப்பட்டுள்ள மணிக்கற்களாகும்.

கஞ்சம் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் இயற்கை ஆட்சி செலுத்தும் கடவுள்களின் பள்ளத்தாக்காக கஞ்சம் விளங்குகிறது. கஞ்சம் சுற்றுலா பயணத்தில் அற்புதமான கடற்கரைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைகள், அவற்றின் புதிரான குகைள் மற்றும் ஒளி பொருந்திய கோவில்கள் என பல அம்சங்கள் உள்ளன. கண்கவரும் வகையிலும் மற்றும் மணல் குவியல்களுடனும் இருக்கும் ஆர்யபள்ளி மற்றும் ஹியுமா கன்டியகாடா ஆகிய கடற்கரைகளை உலகத்தில் வேறெந்த இடத்திலும் காண முடியாது.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிசா செல்லும் நுழைவாயிலாக கிரிசோலா உள்ளது. பட்டி சோன்பூர் கடற்கரை மற்றும் பைய்ராபீ கோவில்களுக்கு அருகில் இந்த இடம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக கிரிசோலா உள்ளது என்பதில் ஐயமில்லை. புகுடாவில் இருந்து அஸ்கா செல்லும் வழியில் கண்கவர் இந்திய கருப்பு மான்களை () காண நின்று செல்லும் இடமாக பெடாநய் என்ற இடம் உள்ளது.

கஞ்சம் நகரத்தில் சில பழமையான மற்றும் தெய்வீகமான அமைவிடங்கள் உள்ளதால் அது அருள் பெற்றிருக்கும் சுற்றுலாத்தலமாக உள்ளது. அதகடபட்னாவில் ஜெகன்நாதருக்கான பழமையான மற்றும் பிரமிக்க வைக்கும் கோவில் உள்ளது. கஞ்சம் மற்றும் பெஹ்ராம்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும் வர வேண்டிய இடமாக மகுரிகலுவா கோவில் உள்ளது. நிர்மலிஜாராவில் விஷ;ணு பெருமானின் உருவத்தின் பாதத்தில் இருந்து ஓடை ஒன்று ஊற்றெடுக்கும் நம்புதற்கரிய காட்சியை காண முடியும்.

பஞ்சாமா மற்றும் உஜால்லேஸ்வர் ஆகியவை இயற்கையருளுடன் விளங்கி வரும் அரிய கோவில்களாக உள்ளன. மேலும், ஜாவ்காடாவில் உள்ள அசோகரின் பாறைக் குடைவுகள் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை வருடம் முழுவதும் ஈர்க்கும் இடமாக உள்ளன. கஞ்சம் பகுதிக்கு சுற்றுலா வர ஏற்ற பருவம் பருவநிலை குளிர்ச்சியாக இருக்கும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான நாட்களில் கஞ்சம் நகருக்கு சுற்றுலா வரலாம்.

கஞ்சம் நகரத்தை அடையும் வழிகள் பெஹ்ராம்பூர் இரயில் நிலையத்தின் முக்கியமான இரயில் சேவைகளுடன் கஞ்சம் நகரம் தொடர்பில் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையமாக புவனேஸ்வர் விமான நிலையம் உள்ளது. இம்மாவட்டம் சிறந்த சாலை வசதிகளை கொண்டதாக உள்ளது.

Related Posts

Leave a Comment