குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..

by Lifestyle Editor
0 comment

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து, பொதுமக்கள் குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கடந்த சில தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகையால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராகி இருக்கிறது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும், ஐந்தருவியில் குளிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment