இந்தியாவில் சுற்றிப்பார்க்கவேண்டிய அழகிய இடங்கள்!

by Column Editor

கொரோனா பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனைவரும் சுற்றுலா பயணிப்பை தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆகையால் வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பவர்களுக்கு உள்நாட்டுலே பயணத்தை தொடங்கலாம்.

அப்படி, இந்தியாவில், நீங்கள் சுற்றுலா செல்ல விருப்பினால் கர்நாடகா உங்களுக்கு ஏற்ற இடமாகும். ஏனெனில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கும், அழகான காடுகள், மலைகள், கோவில்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என பார்க்கும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகளை மெய் சிலிர்க்க வைக்கிறது.

தண்டேலி (Dandeli):

வடக்கு கர்நாடகா மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடமாக தண்டேலி உள்ளது. மேலும், இந்தியாவிலேயே ஆற்று மிதவைப்படகு சவாரிக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாக தண்டேலி விளங்குகிறது.

தண்டேலியில் உள்ள ஆற்றைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஹார்ன்பில் போன்ற பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாகவும் திகழ்கிறது. இங்கு உள்ள காளி நதியானது, அதிக அளவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக திகழ்கிறது.

மேலும், இங்கே வனவிலங்கு சரணாலயம் மற்றும் அன்ஷி தேசிய பூங்கா போன்றவற்றிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தண்டேலி நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுபா அணை, தண்டேலியில் சிறப்பு வாய்ந்த முக்கிய இடமாகும்.

கோகர்ணா (Gokarna):

கர்நாடகாவின் சிறந்த கடற்கரை நகரமாக கோகர்ணா விளங்குகிறது. இங்கு ஓம் பீச், ஹாஃப் மூன் பீச், குட்லே பீச், கோகர்ணா பீச், மற்றும் பாரடைஸ் பீச் போன்ற ஐந்து அழகிய கடற்கரைகள் அமைந்துள்ளன.

கோகர்ணா கடற்கரையானது, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை தன்வசப்படுத்தி கொள்ளக்கூடிய சிறப்பு வாய்ந்த இடமாகும். இங்குள்ள மஹாபல்லேஸ்வரர் கோயில்கள் கலை, கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இங்குள்ள மகாபல்லேஷ்வர் கோயில் தவிர இங்கே மஹா கணபதி கோயில், உமா மகேஸ்வர் கோயில், பத்ரகாளி கோயில், வெங்கட ரமணர் கோயில், தாமரை கௌரி கோயில் ஆகியனவும் பிரபலமான கோயில்களாக திகழ்கின்றன.

இங்குள்ள நீருக்கடியிலான விளையாட்டுக்கள், படகு சவாரிகள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. யானா என்ற நகரத்தில், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் மலையேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மன அழுத்தத்தை குறைக்கிறது.

ஹம்பி (Hampi):

Hampi- என்பது வடக்கு கர்நாடகாவில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு அழகான கோயில் நகரம் ஆகும். இந்த ஹம்பி உலகின் இரண்டாவது பெரிய நகரம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஹம்பியின் உண்மையான அடையாளம் ராமாயணத்தின் நிகழ்வுகளுடனான தொடர்பு என்று கூறப்படுகிறது. ஹம்பியில் அமைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

விஜயநகர பேரரசு காலத்தில் கலைக்கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இவ்விடம் யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டான்டலி கர்நாடகாவில் உள்ள முக்கியமான இடங்களில் டான்டலியும் ஒன்றாகும். இங்கு படகு சவாரிகள், மீன்பிடித்தல், சாகசங்கள், முகாம்கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இங்குள்ள டான்டலி வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்ககூடிய ஒன்றாகும்.

அதேபோன்று, இங்குள்ள கலியாறு பகுதியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபாலமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மலை மற்றும் நிலப்பரப்பு இலையுதிர்காடுகள், ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த இடமாகும். குளிர்காலத்தில், டான்டலி ஒரு இனிமையான சுற்றுலா அனுபவத்தை நம் அனைவருக்கும் வழங்குகிறது.

சிக்மகளூர் Chikmagalur:

சிக்மகளூர், முல்லயங்கிரி மலைத்தொடருக்கு புகழ்பெற்றது. இது மலையேறுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பிரபலமாக உள்ளது. இந்தியாவிலேயே பன்முகம் கொண்ட சுற்றுலாத்தலங்களுள் சிக்மகளூரும் ஒன்று.

சிக்மகளூர் நகரத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மஹாத்மா காந்தி பூங்கா அமைந்துள்ளது. இங்கு பசுமையான அழகுடன் விளங்கும் சிக்மகளூரில் மலைப் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள் கோவில்கள் என எண்ணற்ற பகுதிகள் இருப்பதால் இது சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment