புதிய சீரியலில் நடிக்க கமிட்டான பாரதி கண்ணம்மா தொடர் புகழ் அஞ்சலி- இந்த தொலைக்காட்சியிலா?

by Column Editor

பாரதி கண்ணம்மா விஜய்யில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் கண்ணம்மா மற்றும் பாரதி எப்போது எப்படி இணைவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக அவர்கள் இணைந்து இருக்கும் காட்சிகள் வந்தன, ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. நேற்றைய எபிசோடில் மக்கள் அனைவரும் கண் கலங்கும் அளவிற்கு காட்சிகள் இருந்தன.

இன்று தொடரில் என்ன திருப்பம் இருக்கும் என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் தொடரில் நடிக்கும் சில நடிகர்கள் புதிய சீரியல்களில் கமிட்டாகி இருக்கும் விஷயங்கள் வெளியாகி வருகின்றன.

இதில் வில்லியாக நடிக்கும் பரீனா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதேபோல் பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி வேடத்தில் நடித்துவரும் கண்மணி ஜீ தமிழில் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அருண் பத்மநாபன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார், ஆனால் மற்றபடி தொடர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

Related Posts

Leave a Comment