பிளாக் டீ குடித்தால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்குமா..?

by Column Editor

உயர் இரத்த அழுத்தம் என்பது நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதத்தை பாதிக்கும் ஒரு வாழ்க்கை முறை நோயாகும்.உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிக இறப்புகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு என்பது மற்றவர்களை விட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக பயம் மற்றும் பதட்டத்தை உண்டாக்கும். ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைவில்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு பிளாக் டீ உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் என்பது நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதத்தை பாதிக்கும் ஒரு வாழ்க்கை முறை நோயாகும். தமனிகளில் தொடர்ந்து அதிக இரத்த ஓட்டம் இருப்பதால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனால் இறுதியில் நெகிழ்ச்சித்தன்மையை குறைக்கிறது. இது இதயத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை சரியான முறையில் கொண்டு செல்வதைத் தடுக்கிறது. இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிக இறப்புகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய வழிகள் இல்லை என்றாலும் நம் அன்றாட வாழ்க்கை முறை பழக்கங்கள் மூலம் இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதற்காக நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் கூட பெரிய அளவில் பலன் தரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு மூன்று கப் வெதுவெதுப்பான பிளாக் டீ குடிப்பதால் உங்கள் இரத்த அழுத்தம் கணிசமான அளவில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது எனில் நிச்சயம் இது இதய பாதிப்புகளையும் தவிர்க்க உதவியாக இருக்கும்.

பிளாக் டீயில் ஃபிளேவனாய்டுகள் இருப்பதால் இதயத்திற்கு உண்டாகும் பாதிப்புகளை தடுக்கும் ஆற்றலை பெற்றுள்ளது. அதாவது இதனால் இரத்த ஓட்டம் சீராக மற்ற உறுப்புகளுக்கு பாய்கிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.

நீங்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு கப் பிளாக் டீ குடித்தாலும் அது உங்களுக்கு நன்மை அளிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது இதயம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. அதற்காக அளவுக்கு அதிகமாக பிளாக் டீ குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தூக்கமின்மை, தலைவலி, தலைசுற்றல், பதட்டம் போன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் பிளாக் காஃபி குடித்த பின் உங்கள் இரத்த அழுத்த அளவை கண்கானிக்க வேண்டும். அதேபோல் இது குறித்து மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பதும் அவசியம்.

Related Posts

Leave a Comment