கமல் அதிரடி…. ராஜுவுக்கு ரெட் கார்டா? அதிர்ந்து போன போட்டியாளர்

by Column Editor

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ரெட் கார்டு கொடுக்கும் டாஸ்க் நடந்தேறியது.

இவருக்கு தகுதி இல்லை என்றும் இவருக்கு பதில் வெளியேறிய ஒரு நபர் இருந்திருக்கலாம் என்றும் போட்டியாளர்களையே சொல்ல வைத்து நடிகர் கமல் ரெட் கார்டு கேம் ஆடியுள்ளார்.

ராஜுவுக்கு நிரூப் ரெட் கார்டு கொடுத்ததை பார்த்து ராஜுவே டென்ஷன் ஆகி அதிர்ந்து விட்டார்.

ஞாயிற்றுக் கிழமை யார் எவிக்ட் ஆகி வெளியே போவார் என்பது முன்னதாகவே லீக் ஆகி விடுகிற நிலையில் ஷோவில் சின்ன சின்ன சுவாரஸ்யங்களை கொடுக்க தொடர்ந்து பிக் பாஸ் டீம் முயற்சித்து வருகிறது.

ரெட் கார்டு கொடுத்து அமீரை வெளியே அனுப்பிடுங்க, தாமரைக்கு ரெட் கார்டு கொடுங்க, பிரியங்காவுக்கு ரெட் கார்டு கொடுங்க என ரசிகர்கள் கொந்தளித்து வந்த நிலையில், லோகி வெப்சீரிஸில் இன்ஃபினிட்டி ஸ்டோனுக்கு ஏற்படும் நிலைமையை போல ரெட் கார்டை போட்டியாளர்களே கொடுக்கும் கேமை வைத்து அதற்கு மதிப்பில்லாமல் செய்து விட்டார் கமல்.

Related Posts

Leave a Comment