தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து! – ஆப்பிரிக்காவில் 38 பேர் பலி!

by Column Editor
0 comment

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 38 பேர் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் போன்றவை அதிகமாக கிடைப்பதால் பல நாடுகளின் அரசாங்கமே சுரங்கங்கள் அமைத்து தங்கம், வைரம் வெட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றன. வட கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் தங்க சுரங்கங்களுக்கு பிரபலமான நாடாக உள்ளது.

இந்நிலையில் சூடானின் கொர்டாபென் மாகாணத்தில் உள்ள அரசால் கைவிடப்பட்ட தங்க சுரங்கம் ஒன்றிற்குள் ரகசியமாக தங்கம் எடுக்க 50க்கும் மேற்பட்டோர் நுழைந்துள்ளனர். அங்கு தங்கம் தோண்ட முயற்சித்தபோது சுரங்கம் இடிந்து விழுந்ததால் அவர்கள் சிக்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment