மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா தொற்று இந்தியாவில் தொடங்கிவிட்டதா மூன்றாம் அலை?

by Column Editor

உலகம் முழுவது ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது இந்நிலையில் பல்வேறு நாடுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து கர்நாடக,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.முதல் மற்றும் இரண்டாம் அலைகளை காட்டிலும் தற்போது கொரோனா தொற்று பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,172 பெருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மும்பையில் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கிவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,445 பேருக்கு கொரோனா தொற்று மும்பையில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment