பிரஷ்ஷர் குக்கர் போன்று வெடிக்கும் நிரூப்… கண்ரோலா பாத்துக்கிட்ட பிரியங்கா.. பாராட்டு மழையில் நனையும் போட்டியாளர்கள்

by Column Editor

நிரூப்பை கண்டோலா வைத்துக்கொண்டு பார்த்து கொண்ட பிரியங்காவுக்கு நிரூப்பின் தந்தை பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போட்டியாளர்களின் சொந்தங்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அதன்படி நேற்று அக்ஷரா மற்றும் சிபி ஆகிய இருவரின் சொந்தங்கள் சந்தித்து சென்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று நிரூப்பின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். இது குறித்த முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நிரூபித்தாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்க ஆரம்பித்தேன் என்று நிரூப்பின் தந்தை கூறினார். இதையடுத்து பேசும் நிரூப், அது பரவாயில்லை. இந்த சீசன் முழுவதும் எனக்காக தான் பார்த்தீங்கள என அப்பாவிடம் கேட்கிறார். அதன்பிறகு பேசும் நிரூப்பின் தந்தை, நீ அபினய்யின் கையை பிடித்துக்கொண்டு பேசும் பேச்சைக் கேட்டவுடன், எனக்கு கோவம் வந்துவிட்டது. பிபியும் எகிறிவிட்டது என்கிறார்.

பிரியங்கா மற்றும் ராஜூ ஆகிய இருவரும் இந்த பிக்பாஸ் வீட்டை சரியான பார்த்துக்கொள்கிறீர்கள். பிரியங்கா கொஞ்சம் நிறைய பேசினாலும், நான் பார்த்த வரைக்கும், சரியான விஷயங்களைத்தான் நிரூப்பிற்கு சொல்கிறாய். பிரஷ்ஷர் குக்கர் போன்று வெடிக்காமல் நிரூப்பை பார்த்துக்கொள்கிறீர்கள் என்று போட்டியாளர்களை நிரூப்பின் தந்தை புகழ்ந்து தள்ளினார். தற்போது இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment