312
90களில் மக்களால் கொண்டாடப்பட்ட தொடர்கள் எத்தனையோ உள்ளது. அதில் இளைஞர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான்.
இளமை துள்ளும் பள்ளி வாசத்துடன் அமைந்த இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. கொஞ்சம் டெர்ரர் குரூப், கலாட்டா செய்யும் ஒரு குரூப் என கனா காணும் தொடர் அமர்க்களமாக ஓடியது.
இதன் வெற்றியை தொடர்ந்து பல சீசன்கள் வந்தன, ஆனால் அதெல்லாம் முதல் பாகத்தின் அளவிற்கு மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது புதிய நடிகர்களை வைத்து கனா காணும் காலங்கள் பெயரில் புதிய சீசன் தொடங்கியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட சில நடிகர்களின் விவரமும் தெரிகிறது.