ஒரளவு குறைய தொடங்கிய தக்காளி விலை…மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

by Column Editor

தமிழ்நாட்டில் பெய்த அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்று மக்களை திக்குமுக்காடச் செய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகளின் விலை குறைய தொடங்கியுள்ளது.

முதலில் தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின் வரத்து கொஞ்சம் அதிகமானதும் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரத்தில் அதன் விலை மேலும் குறைந்து, ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தக்காளி வரத்து அதிகரித்ததை அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. இனி வரக்கூடிய நாட்களிலும் வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment