பிக்பாஸில் கொடுக்கப்படும் கடுமையான டாஸ்க்.. நாமினேஷிலிருந்து தப்பிக்க போராடும் போட்டியாளர்கள்…

by Column Editor

நாமினேஷிலிருந்து போட்டியாளர்கள் தப்பிக்க கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

75 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியாளர் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் சாணி தொட்டியில் காயின் எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் தாமரை, அமீர், அபினய் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றது.

நாமினேஷிலிருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த ஐந்து கடுமையான போட்டிகள் கொடுக்கிறது. அதில் முதலில் கார்டன் ஏரியாவில் கம்பிவேலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் படாமல் போட்டியாளர் உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டும். இதையடுத்து கட்டமாக பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இந்த மேலே பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை சரியாக பொருத்தவேண்டும்.

இதைத்தொடர்ந்து சாக்கு ஒன்றில் உள்ளே நின்று தாவிதாவி சென்று அருகில் வைக்கப்பட்டிருக்கும் முட்டையை உடைத்து கொடுக்கவேண்டும். இப்படி கடுமையான ஐந்து தடைகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் விளையாடும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த டாஸ்க்கின் மூலம்‌ இறுதியாக யார் தப்பித்தார் என்பது இன்றைய எபிசோடில் தெரியும்.

Related Posts

Leave a Comment