அடேங்கப்பா.. இந்த டிவிஸ்டை எதிர்பார்க்கலையே! திடீரென பிக்பாஸ் வைத்த செக்! திணறிபோன போட்டியாளர்கள்!!

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் வருத்தமடைந்தனர். மேலும் அண்ணாச்சியுடன் நெருக்கமாக இருந்து வந்த ராஜு கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பிக்பாஸ் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் புதுவிதமாக டுவிஸ்ட் வைத்துள்ளார். அதாவது பிக்பாஸ், போட்டியாளர்கள் அனைவரையும் தான் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்வதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் காப்பாற்றபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment