கமலையே ஷாக் ஆக்கிய பாவனியின் கேள்வி.. பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

by Column Editor

ராஜு அனைவர் முன்பும் பாவனி மற்றும் அபினை இடையே காதல் இருக்கிறதா என கேள்வி கேட்டு இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் வார இறுதி நாட்களில் அதுபற்றி எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.

அதற்குப் பிறகு சிபி அவர்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய நிலையில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. நாங்கள் எங்க வேணும்னாலும் பேசுவோம், எப்படி வேணும்னாலும் பேசிக்கொள்வோம், அது எங்களுடைய பர்சனல், நீங்க யார் கேள்வி கேட்க, உங்களுக்கு எங்க வலிக்குது என பாவனி கொந்தளித்து பேசியிருந்தார்.

அது பற்றி கமல்ஹாசன் இன்றைய எபிசோடில் கேட்டிருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது. ”நான் பேசனும், எப்போது என்னைக் கூப்பிடுவாங்க என்கிற பாவனையோடு உட்கார்ந்து இருந்தார்கள்” என கமல் கூறுகிறார். அது யார் என கேட்க நாங்கள் எல்லோருமே அதே மனநிலையில் தான் இருக்கிறோம் என ஹவுஸ்மேட்ஸ் கூறுகின்றனர்.

அதற்குப் பிறகுதான் பாவனி என குறிப்பிடுகிறார் கமல்ஹாசன். ‘ரொம்ப கோபமான ஒரு பாவனியை பார்த்தோம் என கமல் சொல்ல “எந்த இது சார்” என கேட்கிறார் பாவனி. அதனால் கமல் ரசிகர்கள் பக்கம் திரும்பி சற்று ஷாக் உடன் பார்க்கிறார்.

வீடியோ இதோ

Related Posts

Leave a Comment