”நாடகம் போட வருமான்னு பிரியங்காவை கேளுங்க” – தாமரைக்கு அட்வைஸ் செய்த கமல் !

by Column Editor

தாமரைக்கு கமல் அட்வைஸ் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாவனி மற்றும் ராஜு பிரச்சினையை அடுத்து தற்போது பிரியங்கா மற்றும் தாமரையை பற்றி பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மூக்கறுத்து ஊறுகாய் போட்ருவேன் என ஒருவர் கோபத்தோடு சொன்னால் என்னது மூக்கை அறுத்து ஊறுகாய் போடுவியா.. அப்புறம் எப்படி நான் மூச்சு விடுறது.. அந்த ஊறுகாய் நல்லாவா இருக்கும்ன்னு யோசிக்கக் கூடாது என கமல் கலகலப்பாக பேச போட்டியாளர்கள் உற்சாகமாகின்றனர்.

இதையடுத்து பேசும் கமல், பிரியங்கா மீது உங்களுக்கு ஒரு கோபம் இருக்கு. அப்படிதானே, அதற்கு தாமரை அறிவுரைக்கூறும் கமல், நான் நாடகக்காரி என்பதால்தான் என்னை பார்த்து நாடகம் போடுகிறாய் என்று பிரியங்கா சொல்கிறாங்க என கோவம் இருக்கு என புரிகிறது. அது அப்படி இல்லை. குட்மார்னிங் டாக்டர்னு சொன்னதும் யாரை பார்த்து டாக்டருன்னு சொன்ன என எந்த டாக்டரும் கேட்க மாட்டாங்க என கமல் சொல்கிறார்.

அதெல்லாம் பிரச்சினை இல்லை என்றுக்கூறிய தாமரை, பிரியங்கா சொன்ன விதம்தான் கஷ்டமாக இருந்தது. உடனே நீங்க பிரியங்காவை பார்த்து உனக்கு நாடகம் போட வருமான்னு கேட்டிருக்கணும் என தாமரைக்கு அறிவுரை கூறினார். திடீரென பிரியங்காவுக்கு ஆதரவாக கமல் பேசியுள்ளதால் அவர் உற்சாகமடைந்துள்ளார்.

Related Posts

Leave a Comment