பிரியங்காவுடன்‌ சமாதானமான தாமரை அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விநோதங்கள்…

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் சண்டைப்போட்டு வந்த போட்டியாளர்கள் அடுத்தடுத்து சமாதானமாகி வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ராஜுவுடன் பாவனி சமாதானமான காட்சிகள் காட்டப்பட்டது. நேற்று ராஜு மற்றும் சிபியுடன் ஆவேசமாக சண்டைப்போட்டார் பாவனி. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிட நீ யாரு என்று கேட்டு ராஜுவை சகட்டுமேனிக்கு பேசினார் பாவனி. ஆனால் இன்று அப்படியே மாறி இருவரும் கட்டிப்பிடித்து பாசமழை பொழியும் காட்சிகள் காட்டப்பட்டது. இதையடுத்து சிபி, இமான் அண்ணாச்சி, அபினய் உள்ளிட்டோரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே ராஜு மற்றும் பாவனி சண்டைப்போன்று நேற்று பிரியங்கா, தாமரைச்செல்வி மோதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த மோதல் நேற்று பயங்கரமாக வெடித்தது. இதில் போட்டியாளர்களை பிரியங்கா உசுப்பேத்தி விடுகிறார் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இதனால் இருவருடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவுடன் தாமரையுடன் சமாதானமாகி பேசிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. முதலில் கட்டிப்பிடித்து அன்பை பொழியும் பிரியங்காவும், தாமரையும் இணைந்து பேசுகின்றனர். அதில், நீ உசுப்பேத்திற என்று சொல்லுர. ஆனால் நான் அப்படியெல்லாம் இல்லை. அது உனக்கே தெரியும். நான் சொல்லனும் அவசியமில்லை என்கிறார் பிரியங்கா. நேற்று நடைபெற்ற சண்டையில் சம்பந்தமில்லாமல் கத்துகிறாய். உனக்கு விளையாட்டு புரியல. அது புரிந்துவிட்டால் நீயும், மற்றவர்களும் வேறுவேறு இல்லை என்று தாமரை, பிரியங்காவுக்கு அறிவுரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்படி மாறிமாறி போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து அன்பை பொழிவதால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment