‘கமல் சார் எனக்கு ஒரு தந்தை’ – சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அசீம்

by Lifestyle Editor
0 comment

சர்ச்சையில் அசீம்

கமல் ஹாசனை தாக்கி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அசீம் பேசினார் என்று சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

அந்த பேட்டியில் ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அசீம் கோபத்துடன் நடந்துகொண்டதை பார்க்கும் அவருடைய மகன் தவறான உதாரணமாக இதை எடுத்துக்கொள் மாட்டாரா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ‘ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்கு பல்லாயிரம் நாட்கள் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை பார்த்து தான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமும் இல்லை’ என்று கூறியிருந்தார்.

விளக்கம்

இதை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் கூறிய அறிவுரையை தான் தற்போது தாக்கி பேசியுள்ளார் அசீம் என கூறி வருகிறார்கள். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகவும் உருவானது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அசீம், ‘உங்களுடைய நேரத்தை மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதற்காக செலவிடுங்கள், வெறுப்பை காட்டுவதற்கு செலவிட வேண்டாம். நான் கமல் சாரை தாக்கி பேசவில்லை. இது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நான் வெளியிட்டுள்ள வீடியோ. கமல் சார் எனக்கு ஒரு தந்தை மாதிரி’ என கூறியுள்ளார் அசீம்.

இதோ அந்த வீடியோ..

Related Posts

Leave a Comment