விரதமிருந்து பால் காவடி துாக்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்

by Column Editor

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.

கன்னியாகுமரி அருகே போலீசார் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு பால் காவடி துாக்கிச் சென்று நேர்த்திக் கடன் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும்,

நீர்வளம் செழித்து விவசாயம் தழைத் தோங்கவும் பாரம்பரியமாக வருடா வருடம் தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

இந்த வருடம் கார்த்திகை இணைந்து விரதமிருந்து குமாரக்கோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீசாரும் அதேப்போல் மழை பொழிய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும்,

தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்தும் 41- நாள் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க பால் காவடி ஏந்தி சென்று வழிபாடு நடத்தினர்.

அரசு அதிகாரிகள் விரதமிருந்து பால் காவடி எடுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment