பாவ்னி – அபினய் இடையேயான உறவு…பூகம்பமாக வெடித்த பிரச்சினை!

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் பாவ்னி – அபினய் இடையேயான உறவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அதுவும் பாட்டில் டாஸ்கில் ராஜு நேருக்கு நேராக, அபினய்யிடம், பாவ்னியை லவ் பண்ணுறியா என கேட்டார்.

ஆனால் அப்போதும் அபினய் அதை இல்லை என நேரடியாக பதில் சொல்லி பிரச்சனையை முடிக்கவில்லை.

மாறாக ராஜு கேட்டது தவறு என அனைவரும் அவரை குற்றம்சாட்டினர். இதனால் தான் தவறாக பேசியதற்காக ராஜு அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் லக்சுரி பட்ஜெட் டாஸ்கான மாநாடு டாஸ்கிலும் முக்கிய விவாத பொருளாக பாவ்னி – அபினய் லவ் மேட்டர் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் மேடை விவாதத்தின் போதும் அதே பிரச்சனை எழுப்பப்பட்டது.

அது பற்றி ராஜு பேசி போது அவர் பேசியது தவறு என பிரியங்கா கத்தினார். பாவ்னி, அபினய் ஆகியோரும் அது தங்களின் தனிப்பட்ட விஷயம் என கூறினர்.

விவாத்தின் போது அனைவரும் பேசியதை சொல்லி டாஸ்க் முடிந்ததும் பிரியங்காவை கட்டிப்பிடித்து அழுகிறார் பாவ்னி. நேற்றைய எபிசோடிலும் அபினய்யுடன் தான் பேசுவதை அனைவரும் தவறாக பேசுவதாக கூறி அமீரிடம் புலம்புகிறார் பாவ்னி.

ஆனால், இந்த பிரச்சனையை முடித்து வைப்பதற்காக, மற்றவர்களிடம் போய் பேசி விளக்கம் கொடுத்து, பிரச்சனையை முடி என அமீர், அபினய்க்கு ஐடியா கொடுக்கிறார்.

இந்த பிரச்சனையால் வீட்டில் உள்ள அனைவரும் டென்ஷனாகிக் கொண்டிருக்கையில் சம்பந்தப்பட்ட அபினய்யோ கூலாக நான் எதற்காக விளக்கம் தர வேண்டும். என்னால் முடியாது.

நான் என்ன செய்கிறேன் என எனக்கு தெரியும் என்கிறார். அதே சமயம் பாவ்னி – அபினய் தனியாக பேசுவதையும், அவர்களுக்குள் ஏதாவது இருப்பதாகவும் முதலில் துவக்கியது பிரியங்கா தான்.

பிரியங்கா தான் அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் வந்த முதல் வாரத்திலேயே பேசினார். அப்போது அபிஷேக், இது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் நீ தலையிடாதே என கூறினார்.

அதே பிரியங்கா இன்று மற்றவர்கள் பாவ்னி – அபினய் லவ் செய்கிறார்களா என சந்தேகம் கிளப்பியதற்காக பொங்கி எழுந்து நியாயம் கேட்கிறார். இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பிரியங்காவை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment