கேப்டன் பதவியில் இருந்து 48 மணிநேரத்தில் விராட் கோலியை தூக்கிய கிரிக்கெட் வாரியம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

by Column Editor

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என மூன்று வடிவிலான போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி வந்தார். டோனிக்கு பிறகு, விராட்கோலி தான் கேப்டனாக இருந்து வந்தார்.

உலகின் ரன் மெஷினாக திகழும் விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப நாட்களாக மிகவும் மோசமான ஃபார்மிற்கு சென்றது. இதனால், டி20 கேப்டன் பதவிகளிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்து இருந்தார்.

ஆனால், 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையில், அடுத்தாண்டு நடைபெறும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே கூறியதுபோல ரோகித் சர்மா தான் இந்திய அணியை வழி நடத்தப்போவதாகவும் பிசிசிஐ முடிவு எதிர்பார்க்கிறது. ஆனால், இது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக அவர் மறுத்து விட்டார்.

இதனால், கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் விராட் கோலி பதவியைவிட்டு செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் கெடுவையும் நிராகரித்தார்.

இதனால், அதிருப்தியடைந்த கிரிகெட் வாரியம், 49-வது மணி நேரத்தில் ரோகித்சர்மாவை கேப்டனாக நியமித்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு 2023- ம் ஆண்டு உலகக்கோப்பை வரை ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கேப்டன் பதவியில் விராட் கோலியின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. தொடக்கத்தில் நன்றாக இருந்த அவர் போகப்போக தனது அதிகார போக்கை கடைபிடித்ததாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment