கண்ணு முன்னாடி நடப்பதை கேட்கலாமா ?… கேட்கக்கூடாதா ?.. தலைவியையே கேள்வி கேட்ட ராஜு !

by Column Editor

கண்ணு முன்னாடி நடப்பதை கேட்கலாமா என கேட்கும் ராஜுவுக்கு பிரியங்கா அறிவுரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல் சண்டைகள், மோதல்கள், காரசார வாக்குவாதங்கள் ஆகியவைகளுக்கு குறைவில்லாமல் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருப்பதால் ரசிகர்கள் ஆர்முடன் பார்த்து வருகின்றனர்.

போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து விளையாடி வரும் நிலையில் பிரியங்கா தலைமையில் செயல்படும் ‘உரக்க சொல்’ அணி நேற்று வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், மூன்று அணி தலைவர்களும் இணைந்து ஒரே மேடையில் விவாதம் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அப்போது ‘உரக்க சொல்’ தலைவியிடம் கேள்வி கேட்கும் ராஜு, ’என்னை நீங்கள் சாஃப்ட் கேம் ஆடுகிறாய் என்றும் சேஃப் கேம் ஆடுகிறாய் என்றும் சொல்கிறீர்கள். எதற்காக அப்படி சொன்னீர்கள் என்று ராஜு கேட்கிறார்.

ராஜுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் பிரியங்கா, நீங்கள் தேவையான மக்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தீர்கள், கேள்வி கேட்டிருக்கிறீர்கள், ஆனால் மற்றவர்கள் குறித்து பேசவில்லை என்றார். உடனே ராஜு என் கண் முன்னால் நடப்பது குறித்து பேசலாமா? பேசக்கூடாதா? என்று மீண்டும் கேட்க, அதற்கு பிரியங்கா, கண்ணு முன்னாடி நடப்பதைப் பற்றி பேசலாம், ஆனால் பொது இடத்தில் பேசுவதுதான் தவறு என்கிறார். இந்த வீட்டில் தனியாக இருக்கும் இடம் சொல்லுங்க என ராஜு கேட்க, கோபமாகும் பிரியங்கா, நீ கேட்ட கேள்விக்கு உன் ப்ரெண்ட் அக்ஷராவும், பாவனியும் கைதட்டுகிறார் பாரு என்று மழுப்பலான பதிலுடன் ப்ரோமோ நிறைவு பெறுகிறது.

Related Posts

Leave a Comment