“செமையா பண்ற நீ”… பிரியங்காவிற்கு எதிராக கொக்கரிக்கும் தாமரை !

by Column Editor

பிரியங்கா பேச்சால் கோவமடையும் தாமரை, சண்டைப்போடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இன்றைக்கு போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த டாஸ்க்கின்படி இரு அணிகளாக பிரிந்து விளையாடும்போது முதலில் பேசும் பிரியங்கா, இப்பதான் எனக்கு புரியுது. யார் யாரை இந்த வீட்டில் நம்ப வேண்டும், யார் யாரை நம்பக்கூடாது என்று தாமரை மறைமுகமாக குற்றச்சாட்டுகிறார்.

இதற்கு நேரடியாக பதிலளிக்கும் பதிலளிக்கும் தாமரை, பிரியங்கா, எனக்கு ப்ரெண்டே இல்லை. நம்ம பேச்சு மட்டும் உசந்ததா இருக்கணும், மத்தவங்க எல்லாம் நம்மளுக்கு கீழதான் இருக்கணும் என நினைப்பது பிரியங்கா ஒருவர்தான்’ என்று சொல்வதால், பிரியங்கா அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் இரண்டாவது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் இந்த மோதல் தொடர்கிறது.

மீண்டும் பேசும் பிரியங்கா, சிலபேர் ஒண்ணு பண்றாங்க, அதுக்கு அப்புறம் பின்னாடி இன்னொன்னு பேசறாங்க என்று கூறுகிறார். பிரியங்காவின் இந்த பேச்சு கோபமாகும் தாமரை, நீ சிண்டு முடிந்து பேசுவதிலேயே குறியாய் இருக்கின்றாய், பரவால்ல செமையா பண்ற நீ என்று கூறுகிறார். , அதை நீதான் பண்ணற என்று பிரியங்கா தாமரை குற்றச்சாட்டுகிறார்.

இதையடுத்து பேசும் தாமரை, நீ பயங்கரமான பண்றப்பா, ஆத்தி நான் கூட என்னமோ நினைச்சேன் என்று தனது ஸ்லாங்கில் பேசுகிறார். பின்னர் பாவனியிடம் பேசும் தாமரை, உன் பேச்சை நான் மட்டம் தட்டி பேசினால் என்னை மட்டம் தட்டி பேசுவியா, நான் நியாயத்தை தானே பேசுகிறேன் என்று பிரியங்காவை வறுத்தெடுக்கும் காட்சிகள் இந்த ப்ரோமோவில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. தாமரை மற்றும் பிரியங்கா மோதல் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றே தெரிகிறது.

Related Posts

Leave a Comment