டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா கமல் ஹாசன்…? வைரலாகும் புகைப்படம்…?

by Column Editor

நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன். கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. நடிகர் கமல்ஹாசன் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பங்கேற்றார் நடிகர் கமல் ஹாசன். தினமும் நடிகர் கமலின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது மருத்துவமனை நிர்வாகம். நேற்று கமல் ஹாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று தகவல் வெளியான நிலையில், இன்று வரை எந்தவித அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.இது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. மேலும், நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று ஒரு புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது. அது அவர் சில மாதங்களுக்கு முன்பாக காலில் அறுவை சிகிச்சை பெற்று வீடு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment