இந்த வீட்டில் உசுப்பேற்றும் நபர் பிரியங்கா மட்டும்தான்… கோஷம் போட்ட தாமரை !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை உசுப்பேற்றும் ஒரே நபர் பிரியங்காதான் என தாமரை குற்றச்சாட்டி கோஷம் போடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிக்பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து அரசியல் மாநாடு என்ற டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கில் நேற்று விளையாடிய பிரியங்காவும் தாமரையும் வழக்கம்போல் முட்டிக் கொண்டனர். இந்த சண்டையில் தாமரை நாடகம் ஆடுவதாக பிரியங்கா குற்றம்சாட்டினார். அதற்கு தாமரையோ, என் தொழிலை பற்றி பிரியங்கா தவறாக பேசியதாக அழும் காட்சிகள் வெளியாகின.

இந்த வீட்டில் தாமரை நாடகம் போடுவதாக தான் நேற்று சொன்னேன்னோ தவிர யாருடைய தொழிலையும் கொச்சைப்படுத்தி பேசும் அளவிற்கு நான் கீழ்த்தரமான ஆள் கிடையாது என்று பிரியங்கா கூறுகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் தாமரை, நான் நாடகம் போடுகிறேன் என்று சொல்லறீங்க. உங்களிடம் நல்லா பேசும் வரை என்னை உயர்த்தி பேசினீர்கள்.

உங்களை எப்போது எதிர்த்துப் பேசினேன்னோ அன்றிலிருந்து என்னை மட்டம் தட்ட ஆரம்பித்து விட்டீர்கள் என்கிறார் தாமரை. இந்த வீட்டில் நீ கஷ்டப் படுகிறாய் என்பதால் தான் உனக்கு ஆதரவாக பேசினேன் என்றார் பிரியங்கா. இதையடுத்து இந்த வீட்டில் போட்டியாளர்களை உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும்தான் என்று மீண்டும் மீண்டும் தாமரை கோஷம் போடுகிறார். இதற்கு எதிர்ப்பு கோஷமாக உரக்கச் சொல் என்று பிரியங்கா சொல்வதோடு ப்ரோமோ நிறைவு பெறுகிறது.

Related Posts

Leave a Comment