இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரிகுமார் பதவியேற்பு

by Column Editor
0 comment

இந்திய கடற்படை தளபதியாக ஹரிக்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து, துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று, தில்லியில் உள்ள தெற்கு பிளாக்கில் நடந்த விழாவில் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரிகுமார் பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். பதவியேற்றுக்கொண்டதும் ஹரிகுமார் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related Posts

Leave a Comment