பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதில் பிரபல நடிகை: களைகட்டும் இன்றைய நிகழ்ச்சி

by Column Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை இன்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்ந்து வருகின்றனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்தவரும் நிலையில், இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

100 நாட்கள் நடைபெறும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வாரத்தின் இரண்டு நாட்கள் வந்து தொகுத்து வழங்குவார். இவரைக் காண்பதற்காகவே ரசிகர்கள் வார இறுதியில் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசனுக்கு லேசான இறுருமல் இருந்துள்ள நிலையில், அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கினார்.

பின்பு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என கொரோனாவிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும் என்பதனால் கமல் 2 வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இவருக்கு பதில் மகள் ஸ்ருதி, விஜய்சேதுபதி, சிம்பு என பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுள்ள நிலையில், தற்போது நீலம்பரியாக கலக்கிய ரம்யாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை ரம்யா கிருஷ்ணன், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கி உள்ளார்.

அதனால் அவருக்கு இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் இருக்கும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவரை தொகுப்பாளராக களமிறக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இன்று அதுகுறித்து உறுதியான விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment