204
உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரியத் தொடங்கியுள்ளதால், ரூ.14 லட்சம் கோடி மதிப்பை முதலீட்டாளர்கள் இழந்திருக்கிறார்கள்.
முக்கியமாக அக்.19 அன்று பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 62,245 புள்ளிகள் பெற்று முன் எப்போதும் இல்லாத புதிய வரலாறு படைத்திருந்தது.
பின் அடுத்தடுத்த நாட்களில் சரியத் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்புகளால் இன்று 14 லட்சம் கோடி அளவிலான மதிப்பை முதலீட்டாளர் இழந்திருக்கிறார்கள்.
இன்று 58,254 புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் தற்போது நிலவரப்படி 1687 புள்ளிகள் சரிந்து 57,107.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
17,338.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 509 புள்ளிகள் குறைந்து 17,026.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.