வெளியான 2 நாளில் 14 கோடி வசூல் செய்த ‘மாநாடு’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

by Column Editor

மாநாடு’ திரைப்படம் வெளியான இரண்டு நாளில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகளும் இணைத்து வருகின்றனர்.

எஸ்.ஜே சூர்யா, சிம்பு, யுவன் என பலருக்கு மாநாடு திரைப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில், இரண்டாவது நாளையும் சேர்த்து ‘மாநாடு’ திரைப்படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment