KGF 3 படத்தில் இந்த பிரபலம் நடிக்கிறாரா ..

by Lifestyle Editor

கன்னட சினிமா படங்கள் இப்போதெல்லாம் எல்லா மொழி ரசிகர்களிடமும் நல்ல ரீச் பெற்று வருகிறது. அதற்கு உதாரணமாக KGF மற்றும் காந்தாரா படங்களை கூறலாம்.

இரண்டு படங்களையுமே தமிழ் சினிமா ரசிகர்கள் வெற்றிப் பெற செய்துள்ளனர்.

இப்போது ரசிகர்களின் அடுத்த கேள்வி KGF 3 ரிலீஸ் எப்போது என்பது தான், ஆனால் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் ரசிகர்கள் ரிலீஸ் குறித்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது இப்பட நாயகன் யஷ் பிரபல கிரிக்கெட் வீரர் Hardik Pandyaவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதோடு அவர் யஷ்ஷுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு Kgf3 என பதிவு செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அப்போது பாண்டியா நடிக்கிறாரா என இப்பேதே ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment