433
பிக்பாஸ் 5வது சீசன் படு வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
எல்லா நிகழ்ச்சிகளை போல ஆரம்பத்தில் நன்றாக பேசிவந்த போட்டியாளர்கள் டாஸ்க் போன்ற சில விஷயங்கள் நடக்க சண்டையில் ஈடுபடுகின்றனர்.
இப்போது ஒருவருக்கொருவர் மீது கடும் வன்மத்தில் உள்ளார்கள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.இந்த நேரத்தில் தான் இப்போது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ஒரு பிரபலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து வெளியேறிய அபிஷேக் தான் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளாராம்.
அவரைக் கண்டதும் போட்டியாளர்கள் பயங்கரமாக கத்தி சந்தோஷப்படுகிறார்கள்.