சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியானது!

by Column Editor

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் படத்தின் முன்னோட்டமும் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா பார்ப்பதற்கு வேல் படத்தின் கெட்டப்பில் காணப்படுகிறார்.

Related Posts

Leave a Comment