50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்

by Editor News

பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லேசான நோய்க்கு எதிராக கூட மூன்றாவது தடுப்பூசி குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குவதாக தரவுகளை மேற்கோளிட்டு பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார்.

முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் இளையோருக்கு பூஸ்டர்களை வழங்கக் கூடாது என்பதற்கான காரணத்தை தான் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கிறிஸ்மஸில் இங்கிலாந்துக்கு பேரழிவு தரும் குளிர்கால அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் சனிக்கிழமையன்று 38,351 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் 157 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

Related Posts

Leave a Comment