சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாமக மா.தலைவர் அறிவிப்பு

by Lifestyle Editor

சூர்யா நடித்து தயாரித்து வெளிவந்த ஜெய் பீம் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது . இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றன. குறிப்பாக வன்னியர் சமூகத்தையும் வன்னியர் சமூக முக்கிய பிரமுகர்களையும் இந்தப்படம் அவமானப்படுத்துவதாக சொல்லி பாமகவினர் குறிப்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் போக்கு கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும்கூட அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்கினி கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம் பெற்று இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருந்தார் அன்புமணி ராமதாஸ். மேலும் உண்மை சம்பவத்தில் அந்த காவல் ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை. ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ. குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், உண்மை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கேரக்டர்களுக்கு உண்மை சம்பவத்தின் கேரக்டர் பெயர்களையே வைத்த நீங்கள் அந்தோணிசாமி கேரக்டருக்கு மட்டும் எதற்கு குருமூர்த்தி என்கிற பெயரை வைத்தீர்கள். அதை நீதிபதி குரு என்று அழைக்கும் வகையில் ஏன் காட்சி அமைப்புகள் என்று கேள்வி எழுப்பியிருந்தார் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணியின் இந்த எதிர்ப்புகள் அடுத்து படத்திலிருந்து அந்த காட்சிகள் நீக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்க கூடாது என்று பதிலடி கொடுத்திருந்தார் சூர்யா. இதனால் கொதித்தெழுந்த குருவின் மருமகன், சூர்யாவின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றார் ஆவேசமாக.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களும் உண்மைப் பெயரைச் சுற்றி விட்டு வேண்டுமென்றே வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தில் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டத்தை காட்டியும் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டத்தை காட்டியும், வன்னியர் சங்க தலைவர் குரு பெயரை வைத்து அவரது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களிடம் இணக்கமாக பழகி வரும் வேளையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவது போல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் .

இதை தொடர்ந்து சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சென்று படத்தை நிறுத்தச் சொல்லி, பாமகவினர் முத்தமிட்டனர். சூர்யா அப்ட போஸ்டரை கிழித்து எறிந்தனர். இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சூர்யா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த மாவட்டத்தில் சூர்யாவின் எந்தப் படத்தை திரையிடுவதற்கும் பாமக அனுமதிக்காது என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வேல் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கதினர் சூர்யா படத்திற்கு பதிலாக வேறு படத்தை மாற்றி திரையிடுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். போலீசார் வந்து வேல் படத்தை திரையிட சொல்லியும் திரையரங்க உரிமையாளர் பிரச்சனை தேவை இல்லை. நாங்கள் வேறு படத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று தெரிவித்து விட்டார்கள்.

Related Posts

Leave a Comment