தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் எபிசோட்டுகள் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், சீரியலில் சில மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
வெண்பா கர்ப்பமாக இருப்பதால் அவரை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து மாயாண்டியை ரீஎண்ட்ரி கொடுக்கவைத்துள்ளனர். இதையடுத்து படவாய்ப்பு கிடைத்துள்ளதால் சீரியலில் கவனம் செலுத்த முடியாது என்பதற்காக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிபிரியா விலகவுள்ளதாக தகவல் வெளியானது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகாத நிலையில் தற்போது கண்ணம்மாவை படப்பிடிப்பு தளத்தில் கேக் வேட்டி வழியனுப்பி வைத்துள்ளனர் சீரியல் குழு. இயக்குநர், சக நடிகர் நடிகைகள் இணைந்து அவரை மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று அவரின் கடைசி எபிசோட் ஒளிப்பரப்பாகிய நிலையில் வரும் நாட்களில் இருந்து மாடல் நடிகை வினுஷா தேவி நடிக்கும் காட்சிகள் ஒளிப்பரப்பாகும்.