’’குஷ்புவும், காயத்ரியும் அடிக்க வருவாளுக, நான் வாயில வாழப்பழத்த வச்சிக்கிட்டு இருக்கணுமா?’’

by Lifestyle Editor

மனுஸ்மிருதி நூலினை ஆதாரமாக காட்டி இந்து மதம் குறித்து தவறான கருத்தினை தெரிவித்ததாக சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை விசிகவினர் முற்றுகையிட்டனர். வீட்டுக்குள் நுழைய முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என்று காயத்ரி தெரிவித்திருந்தார்.

நடிகை குஷ்புவும் திருமாவளவன் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். குஷ்புவும், காயத்ரி ரகுராமும் பாஜகவின் பிரமுகர்கள் என்றாலும், திருமாவளவனுக்கு ஆதராவாக களமிறங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சினிமாக்காரிகள் என்று இருவரையும் கடுமையாக விமர்சித்தார். இந்த களேபரங்கள் கடந்த 2019ம் ஆண்டில் நிகழ்ந்தன.

இந்நிலையில், காயத்ரி ரகுராமையும், குஷ்புவையும் கடுமையாக தாக்கி பேசும் வேல்முருகன் வீடியோவை வெளியிட்ட காயத்ரி ரகுராம், ‘’உன்னை மிரட்டாமல் ஏன் இவ்வளவு பயம்? ஒரு பெண்ணுக்கு ஏன் அருவாள் சுமக்க வேண்டும்?’’என்கிறார்.

மேலும், ‘’திருமாவும், வேல்முருகனும் அவர்கள் எங்கும் காணப்படவில்லை என்றால் விளம்பரம் இல்லை என்றால் காயத்திரி ரகுராம் மாமியைத் தூண்டுவார்கள். .. அதனால் அவர்கள் மாமிகளை மட்டும் தாக்குகிறார்கள்.. இது அவர்களின் ஆண்மை. உங்கள் தொகுதியில் ஏதாவது வேலை செய்யுங்கள்..வெள்ளத்தில் மக்களுக்கு உதவுங்கள், நல்ல சேவை செய்யுங்கள். நான் உன்னை கண்டு பயப்படவில்லை..’’என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வீடியோவில் வேல்முருகன், ’’நான் காந்தி இல்ல, புத்தன் இல்ல, ஏசு இல்ல. நீ என்னை தாக்க வருகின்றபோது இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சொல்கிறது. தன்னை தற்காத்துக்கொள்வதற்கு எதிரி எந்த ஆயுத்தை எடுக்கிறானோ அந்த ஆயுதத்தை வேல்முருகன் எடுக்கலாம் என்று நீதிமன்றங்கள் வழிகாட்டி இருக்கின்றன.

காயத்ரி ரகுராமும் மும்பையில் இருந்து வந்த குஷ்புவும் திட்டி வருவாளுக, அடிக்க வருவாளுக, இவளுங்க எப்படி வேணும்னாலும் பேசுவாளுங்க வேல்முருகன் வாயில வாழப்பழத்த வச்சிக்கிட்டு இருக்கணுமா?

சட்டரீதியாக எதுக்கு போகணும்? உயர்நீதிமன்றமாவது மயிர் நீதிமன்றமாவது என்று எச்.ராஜா பேசினார். அதுக்கு சட்ட ரீதியாக என்ன செய்ய முடிஞ்சது?

ஊடகத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டியவர்கள் அவர்கள் காட்ட வேண்டியதை காட்டி, படுக்க வேண்டிய இடத்தில் படுத்தால்தான் அந்த இடத்துக்கு வரமுடியும் என்று சேகர் சொன்னாரே. என்ன செஞ்சிடுச்சு நீதிமன்றம்?

வாய் துடுக்காக வாய் கொழுப்பெடுத்து இந்த மண்ணின் பூர்வ குடிமக்களை மண்ணின் மைந்தர்களை ஒருமையில் அவன் இவன் என்று பேசுவதும் காலில் கிடப்பது பேசும் என்கிற துணிச்சலும் எங்கிருந்து வந்தது?

அப்படி பேசுகின்றபோது எங்கள் பாணியில் தண்டனை தருவோம்.’’ என்கிறார் கடுமையாக.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வேல்முருகன் பேசிய இந்த வீடியோவை இப்போது வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

Related Posts

Leave a Comment